முதுகெலும்புள்ள தலைமைத்துவமே அவசியம்

பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் சிலரே கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி புறமுதுகில் குத்த பார்க்கின்றனர் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கட்சிக்குள் உள்ள சிலர் பிரதமர் பதவி குறித்து கனவு காண்கின்றனர், மேலும் சிலர் தேசிய பட்டியலுக்காக போராடுகின்றனர், அமைச்சு பதவிகளை எதிர்பார்த்துள்ள சிலரும் இருக்கின்றனர். இவ்வாறு கனவு காண்பவர்கள்தான் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

இதனை சீர்செய்யாவிட்டால் கட்சியாக முன்னோக்கி பயணிக்க முடியாது. அது கட்சிக்கே பெரும் பின்னடைவாக அமையும். மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி நாட்டை மீட்க முடியாது. முதுகெலும்புள்ள தலைமைத்துவம் அவசியம். விவாதித்துக்கொண்டு இருப்பதில் பயன் இல்லை. செயலில் தான் காட்ட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles