நுவரெலியா முதல் நோர்வூட் வரையிலான 53 கி.மீ தூரத்தை, இரு கைகளிலும் 5 கிலோ பாரத்தை ஏந்தியவாறு நான்கரை மணிநேரத்தில் நடந்து – கடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு நோர்வூட் போற்றி தோட்டத்தைச் சேர்ந்த வ. வாசிகன் இன்று முயற்சி மேற்கொண்டார்.
எனினும், குறித்த தூரத்தை கடப்பதற்கு 6 மணிநேரம் எடுத்ததால் சோழன் உலக சாதனையில் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்தார். எனினும், முயற்சி தொடரும் எனவும், சாதனை நிச்சயம் நிகழ்த்தப்படும் எனவும் வாசிகன் கூறினார்.
குறித்த இளைஞனின் முயற்சியை பாராட்டும் நோக்கில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் பதக்கத்தையும், சின்னத்தையும் வழங்கி அவரை உற்சாகப்படுத்தியது.
முயற்சி தொடரட்டும். வெற்றி இலக்கை அடைந்து – சாதனை படைக்க வாழ்த்துகள்…