ஐக்கிய மக்கள் சக்திக்குள் மைத்திரிபால சிறிசேன போன்றவர்களை உள்வாங்குவதாக இருந்தால் கூட்டணித் தலைவர்களின் உடன்பாடு மிக அவசியம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவிற்கு மட்டும் உடைமையானது அல்ல. கூட்டணித் தலைவர்களாகிய நாங்களும் உடைமையாளராக இருக்கின்றோம். யாரும் யாருடனும் பேச்சுவார்தைகளை நடத்தலாம். ஆனால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் புதிதாக யாரையும் உள்வாங்குவதாக இருந்தால் கூட்டணித் தலைவர்களின் உடன்பாடும் அவசியம்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர்க.வி.விக்னேஸ்வரனது உரையினை நாடாளுமன்றப்பதிவில் இருந்து நீக்குமாறு மனு நாணயக்கார கூறியது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அவருடைய கருத்து ஐக்கிய மக்கள் சக்தியின் கருத்தாக அமைந்து விடாது.
இலங்கையின் வரலாற்றை பார்க்கின்ற போதுவிஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இங்கு இயக்கர், நாகர் என்ற இரு திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது.’
அது போல மகாவம்சத்தை விட காலத்தால் முற்பட்ட இதிகாசமாகிய இராமாயணத்தில் இலங்கைத் தீவுபற்றியும் அதன் மன்னனும் சிவ பக்தனுமாகிய இரா
வணன் பற்றியும் கூறப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் இலங்கையின் மூத்த குடிகள் என கூறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. – என்றார்.










