முஸ்லிம் கட்சிகளிடம் பைசர் முஸ்தபா முன்வைத்துள்ள கோரிக்கை!

வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் கட்சிகள் ஒருபோதும் ஆதரவு வழங்கக்கூடாதென முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து அரசிடம் அரசிடம் கடிதமொன்றை கையளிக்க முற்படுகின்றன. அந்த கடிதத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்
கட்சிகளின் ஆதரவை தமிழ்க்கட்சிகள் கோரினால், அதனை வழங்கவே கூடாது.

கிழக்கு மாகாணத்தைவிடவும் அதிகளமான முஸ்லிம்கள் வெளி மாவட்டங்களில்தான் வாழ்கின்றனர். எனவே, புரிந்துரண்வு
உடன்படிக்கைக்கு செல்ல முன்னர் அனைத்து முஸ்லிம்கள் தொடர்பிலும் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.” – எனவும் அவர் குறிப்பிட்டுளளார்.

Related Articles

Latest Articles