மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’.

ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை ‘மெட்ரோ’, ‘கோடியில் ஒருவன்’ உள்பட சில படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்துக்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

90-களில் நடக்கும் கதையான இது மதுரை பின்னணியில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் இருந்து ‘கனகா’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் ஸ்ரேயா, இதில் ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளார்.

‘மெட்ரோ’ சிரிஷுடன் ஸ்ரேயா ஆடியுள்ள இப்பாடல், இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரக்‌ஷிதா சுரேஷ் பாடியுள்ள இப்பாடல், வெளியான 48 மணி நேரத்தில் 4.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.

 

Related Articles

Latest Articles