மெரயா நகரில் கல்லறையை ஆக்கிரமித்து சகாக்களுக்கு கூறுபோட்ட அரசியல் வாதி!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரயா நகரத்தில் கல்லறை ஒன்று அமைக்கப்பட்டிருந்த இடத்தை,  அந்த நகரத்தில் உள்ள பிரபல கட்சியின் அரசியல்வாதி ஒருவர் கையகப்படுத்தி அந்த இடத்தை தனது ஆதரவாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லிந்துலை  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது பாட்டனாரின் கல்லறையை உரைத்தெறிந்து இவ்வாறு கட்டிடம் அமைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மெராயா நகரத்தில் காணப்பட்ட மயான இடத்தை கையகப்படுத்தி குறித்த அரசியல்வாதி கட்டிடம் அமைத்துள்ளதாகவும் அதனை தனது ஆதரவாளர்களுக்கு வாடகைக்கு வழங்கியுள்ளதாகவும் நகரில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles