பாதெனிய – அனுராதபுரம் வீதியின் அம்பன்பொல பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸொன்று, வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தலாவ பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 71 வயதுடைய இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஆறு பெண்களும் ஒரு ஆணும் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 18 பெண்களும் 4 ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
