மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பு

2ஆம் இணைப்பு

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று இன்று மதியம் (14.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் (12.08.2024) தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர்கள் முன்னெடுக்கப்பட்டப்போதும் அது பயனளிக்கவில்லை. அதன் பிறகு நேற்றைய தினம் (13.08.2024) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் இன்று (14.08.2024) சடலமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்துக்கொண்டு இருந்ததை இப்பிரதேசவாசிகள் கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து, பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தலவாக்கலை மேற்பிரிவு தோட்டப்பகுதியைச் சேர்ந்த 24வயது கொண்ட டி.மதுஸான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

……

தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதந்துக்கொண்டுள்ளது.

குறித்த நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதை அவதானித்த பொதுமக்கள், அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் வருகை தந்தனர், சடலத்தை மீட்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கௌசல்யா

Related Articles

Latest Articles