தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று (01) மிதந்தநிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து மகாலெட்சுமி (வயது – 22) என்பவரது சடலம் அது என்று அவரது உறவினர் களால் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நுவரெலியா நீதிவான் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்து நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, தடயவியல் பிரேத பரிசோதனைக்காக உடலை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் தலவாக்கலை பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்.
