ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுவருகின்றது என தெரியவருகின்றது.
மே 15 ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வது சம்பந்தமாகவும் குறித்த கூட்டத்தில் ஆராயப்படுகின்றது எனவும் அறியமுடிகின்றது.
அரசமைப்பின் பிரகாரம் ஒக்டோபர் நடுப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிப்பு விடுக்கும் அதிகார தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜுன் மாதம் கிட்டுகின்றது.
எனவே, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமெனில் மே 15 ஆம் திகதி நள்ளிரவுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாக வேண்டும்.
முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு மொட்டு கட்சி ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தற்போது நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாலேயே விசேட நாடாளுமன்ற அமர்வுகூட இவ்வாரம் கூட்டப்பட்டுள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
நாடாளுமன்றம் மே 15 ஆம் திகதிக்குள் கலைக்கப்படுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. எனினும், இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.










