பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான ஷகிப் அல் ஹசன், மைதானத்துக்குள் முறையற்ற விதத்தில் நடந்துக்கொண்டு நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் அவருக்கு போட்டித் தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் நடைபெறும் டாக்கா பிரிமியர் லீக் ரி – 20 கிரிக்கெட் தொடரின்போதே, ஷகிப் அல் ஹசன் ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டார்.
தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர், விக்கெட்டை உடைத்து, தரையில் அடித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரின் இந்த செயற்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையிலேயே டாக்கா பிரிமியர் லீக்கில் மூன்று போட்டிகளில் பங்கேற்க தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.