ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் அணி மற்றும் டலஸ் தரப்பு என்பன இணைந்து ‘சுதந்திர மக்கள் கூட்டமைப்பு’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
அத்துடன், உள்ளாட்சிமன்ற தேர்தலில் கூட்டணியாக ‘விளக்கு’ சின்னத்தில் போட்டியிடுவது சம்பந்தமாகவும் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, ரத்தன தேரர் தலைமையிலான அமைப்பு என்பன மேற்படி கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளன.
