‘மொட்டு என்பது குடும்ப கட்சி’ – ஐக்கிய மக்கள் சக்தியே ஜனநாயக கட்சி’

” ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியை பாதுகாப்பதற்காகவே மொட்டு கட்சி மலர்ந்துள்ளது. ஆனால், நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தி உதயமாகியுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ஹிரண்யா ஹேரத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனநாயகத்துக்கான போராட்டத்தின் விளையாகவே ஐக்கிய மக்கள் சக்தி உதயமானது. எமது கட்சிக்கும், மொட்டுக்கட்சிக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

” 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக்கட்சியும் 1951 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் உருவாக்கப்பட்டன. அதன்பின்னர் இவ்விரு கட்சிகளுமே நாட்டை ஆண்டுள்ளன. எனினும், 2016 இல் அரசியலில் மாற்றம் ஏற்பட்டது.

சுதந்திரக்கட்சியில் இருந்து பிரிந்துசென்ற சிலர் மொட்டு கட்சியை ஆரம்பித்தனர். அது தற்போது குடும்பக்கட்சியாகியுள்ளது. ஜனநாயகத்துக்காக மக்களின் கோரிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டதே சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியாகும்.” எனவும் சட்டத்தரணி ஹிரண்யா ஹேரத் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles