ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்குகளே ஜே.வி.பி. பக்கம் செல்லும். அக்கட்சி எவ்வளவுதான் துள்ளினாலும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரான எஸ்.எம். மரிக்கார் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பிக்கு நான்கு லட்சம் வாக்குகளே கிடைத்தன. சஜித் பிரேமதாசவுக்கு 56 லட்சம் வாக்குகளும், கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 லட்சம் வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளில் 4 லட்சம் வாக்குகள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களினது வாக்குகளாகும். அவர்கள் மீள வருவார்களா என தெரியவில்லை.
எனவே, 65 லட்சம் வாக்குகள் என வைத்துக்கொள்வோம், அதில் 20 லட்சம் வாக்குகளை எடுத்தால்கூட ஜே.வி.பியால் 25 லட்சம் வாக்குகள் என்ற கட்டத்துக்கே செல்ல முடியும். ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 லட்சம் வாக்குகள் கிடைத்தால்கூட 60 லட்சத்தை தாண்டிவிடலாம்.
மொட்டு கட்சி வசம் 20 லட்சம் வாக்குகள் இருக்கும், ஆக ஜே.வி.பி. 40 லட்சம் வாக்குகளைப் பெற்றால்கூட வெற்றிபெறமுடியாது.” – என்றார்.
