ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவா என்று அவரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச,
“ இது தொடர்பான அறிவிப்பை உரிய நேரத்தில், தலதாமாளிகையில் வழிபட்ட பின்னர் அறிவிக்கப்படும்.” – என்றார் நாமல் ராஜபக்ச.
“ அம்பாந்தோட்டையில் இருந்தாலும், கொழும்பில் இருந்தாலும் எமது கட்சிக்குரிய ஆலோனை வழங்கி கட்சியை மஹிந்த ராஜபக்ச வழிநடத்துவார்.
அரசாங்கத்தின் காலை வாருவதற்கு நாம் முற்படவில்லை. தமது காலை தாமே வாரிக்கொள்ளும் வகையில்தான் அரசாங்கம் செயல்பட்டுவருகின்றது.
தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் தெளிவான விசாரணை அவசியம்.” – என்றார்.










