ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்தவாரம் பெயரிடப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க, பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தம்பிக்க பெரேரா ஆகிய நால்வரில் ஒருவரே அந்த வேட்பாளராக இருப்பார் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, “எதிரணி உறுப்பினர்கள் கோப்குழுவில் இருந்து விலகுவதால் அக்குழுவின் தலைமைப்பதவியை நான் துறக்கப்போவதில்லை. ஜனாதிபதி அல்லது ஆளுங்கட்சி கோரிக்கை விடுத்தால் பதவி விலக தயார்.” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
தனக்கு எதிராக திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு இருக்கின்றது என உறுதிப்படுத்தப்பட்டால் கோப் குழுவின் தலைவர் பதவியை அல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்குகூட தயார் எனவும் ரோஹித அபேகுணவர்தன சவால் விடுத்துள்ளார்.
