ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மொட்டு கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில், பஸில் ராஜபக்சவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன்போதே தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாமல் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
