மொட்டு கட்சியுடன் சட்டப்போருக்கு தயாராகிறார் பீரிஸ்!

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டம் சட்டவிரோதமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று மீண்டும் அறிவித்தார்.

அத்துடன், மொட்டு கட்சியின் புதிய தவிசாளர் நியமனம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடந்த சனிக்கிழமை நடத்திய பொதுச்சபைக் கூட்டம் சட்டவிரோதமானது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். கூட்டத்தின் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லுபடியற்றவையாகும். நீதிமன்றம் ஊடாக இதனை நாம் நிரூபிப்போம்.

கிராமங்களில் மரண சங்க கூட்டத்தை நடத்துவதற்குகூட நடைமுறைகள் உள்ளன. ” – என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.

எனினும், பொதுச்சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் இன்று அறிவித்தார்.

 

 

 

 

 

 

Related Articles

Latest Articles