ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக செயற்படும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு அடுத்த தேர்தலின்போது போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்ககூடாது என கட்சி தலைமைப்பீடத்திடம் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளனர்.
12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த யோசனை கையளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து அமைச்சரவையில் இடம்பெற்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிகவுக்கு சார்பாக கருத்துகளை வெளியிட்டுவரும் அரசியல்வாதிகளை இலக்குவைத்தே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
