மொட்டு கட்சி ஓகே சொன்னால் நான் ரெடி!

“ என்னால் அதிகம் விரும்பப்படும் பொருளாதாரக் கொள்கைத் திட்டம் மஹிந்த சிந்தனை கட்டமைப்பில் உள்ளது.” –என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் பயணிக்ககூடிய ஒருவரையே தமது கட்சி ஆதரிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அறிவித்துள்ள நிலையிலேயே தம்மிக்க பெரேரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவரிடம் எழுப்பட்ட கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும் வருமாறு,

கேள்வி – மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நீங்களா?

பதில் – ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நான் முழுமையாக தயார், இலங்கையில் உள்ள பிரதான பெரிய கட்சிதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகும். எனவே, அந்த கட்சியின் முடிவு அவசியம்.

கேள்வி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்கினால் மட்டுமா தேர்தலில் போட்டியிடுவீர்கள்?

பதில் – நான் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் செயற்படுபவன். என்னால் விருப்படும் பொருளாதாரக் கொள்கை அதில் உள்ளது.

கேள்வி – திங்கட்கிழமை ஜனாதிபதி வேட்பாளர் ஆக தயாரா?
பதில் – நான் எந்நேரத்திலும் தயாராகவே இருக்கின்றேன்.

கேள்வி – கட்சி ஆதரிக்காவிட்டால்?
பதில் – எந்தவொரு முடிவையும் சந்தோஷமாக ஏற்கவேண்டும்.

 

Related Articles

Latest Articles