ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனக்கு 10 நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தொழிலதிபரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும் அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க நால்வரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுவருகின்றன எனவும், அவர்களில் ஒருவர் தம்மிக்க பெரேரா எனவும் மொட்டு கட்சி செயலாளர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.