மோகினி எல்ல பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் – இன்று ஆய்வு!

மஸ்கெலியா, நல்லத்தண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் பாரிய மண்சரிவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன், நேற்று நேரடியாக சென்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அது தொடர்பில்  நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபடவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நில ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் கொழும்பில் இருந்து இன்று வர உள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன் தெரிவித்தார்.

சிறிய வெடிப்புகள் அனைத்தும் தற்போது பாரிய வெடிப்புகளாக மாறியுள்ளன. குறித்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  சுமார் 200 மீட்டர் தூரம் பாரிய வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.

மஸ்கெலியா நிருபர் – செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles