மோசமானதொரு பொருளாதார நெருக்கடியில் சிறந்த பட்ஜட்

நாடு மிக மோசமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறந்த வரவு செலவுத் திட்டமாக இதனை பார்க்க முடிகிறது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவு குறித்து அவர் மேலும தெரிவிக்கையில்,

வரலாற்றில் நாடு பெற்றுக் கொண்ட கடனை மீள செலுத்த முடியாத நிலை உள்ள போதும் கடன்களை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான வரவு செலவு திட்டமாக இதனைக் குறிப்பிட முடியும். பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல், பொருளாதாரம், நிதி முகாமைத்துவம் போன்றவற்றை முறைப்படுத்துகின்ற சிறந்த கொள்கையுடனான திட்டங்களைக் கொண்ட வரவு செலவுத் திட்டம் இது.

அந்த வகையில் இதன் மூலம் சட்டங்கள் பல திருத்தம் செய்யப்படுகின்றன. அரசு நிதி தொடர்பான பொறுப்புக் கூறும் சட்டமும் திருத்தப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles