நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த சந்தேக நபர்கள் நான்கு பேரை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 24 ஆம் திகதி சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் ஒரு தொகை மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களையும் இலக்கத்தகடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் சிராவஸ்திபுர மற்றும் கெக்கிராவ கித்துள்ஹிட்டியாவ, தம்புள்ள பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
