மலையக மக்கள் முன்னணியின் 35வது ஆண்டு நிறைவு விழாவும், பேராளர் மாநாடும் எதிர்வரும் 28ம் திகதி ஹட்டன் டிகேடபிள்யூ கலாச்சார மண்டபத்தில் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் ,
“ இம்மாநாடானது மலையக மக்கள் முன்னணியின் 35வது ஆண்டை கொண்டாடும் ஒரு எழுச்சி மாநாடாக காணப்படும். மலையக மக்களின் வாழ்க்கை பயணத்திற்கு கட்சி என்ற அடிப்படையிலும் தொழிற்சங்கம் என்ற அடிப்படையிலும் சேவையாற்றிவரும் மலையக மக்கள் முன்னணி 35வருடத்தில் கால் பதித்துள்ளமை வரலாற்று மிக்க நிகழ்வாகும்.
அந்நிகழ்வை மிக பிரம்மாண்டமான முறையில் மாற்றத்தை நோக்கிய மலையகம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில்
கடந்த காலங்களில் மலையக மக்கள் முன்னணியின் எழுச்சி, வளர்ச்சிக்காக பாடுபட்ட தொழிற்சங்க தலைவர்களை கௌரவிப்பதோடு ஊடகத்துறை சார்ந்தவர்களையும் கௌரவிக்கும் ஓர் நிகழ்வாக இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் குறித்த மாநாட்டில் முக்கிய நிகழ்வாக மலையக மக்கள் முன்னணிக்கு வித்திட்டு அதை விருட்சமாக வளர வழி வகுத்த மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரனுக்கு தபால் தலை வெளியிடவும் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்