“இந்நாட்டில் யானையொன்றுக்குகூட வாழும் உரிமை இல்லாமல்போயுள்ளது. இந்த கட்சிக்கு (ஜே.வி.பி.) யானை என்றாலேயே அச்சம்தான். அதனால் தந்தம் உள்ள யானைகள் கொல்லப்படலாம்.
எங்கள் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கே தற்போது திறப்பு விழா நடக்கின்றது. மெட்ரோபஸ்கூட ரணில் விக்கிரமசிங்கவால் கொண்டுவரப்பட்டதுதான்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.










