திருகோணமலை -கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோமரங்கடவல -புலிக்கண்டிகுளம் பகுதியில் இன்று (31) அதிகாலை வீட்டில் முற்றத்தில் யானை நின்ற நிலையில் அதனை துரத்துவதற்கு முற்பட்டபோது குறித்த நபரை யானை தாக்கிய நிலையில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான பக்மீகம -புளிக்கண்டி குளம் பகுதியைச் சேர்ந்த எம்.புஞ்சி பண்டா (74 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.










