‘யானை – மொட்டு கூட்டணி’ – இன்றும் முக்கிய பேச்சு!

உள்ளாட்சிமன்ற தேர்தலில் பொது இணக்கப்பாட்டுடன் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாரத்துக்குள் இறுதி முடிவை எட்டுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையிலான முதல் சுற்று பேச்சு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் இன்றும் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இச்சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பஸில் ராஜபக்ச, சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரும்,

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வஜீர அபேவர்தன, பாலித ரங்கே பண்டார, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், சாகல ரத்னாயக்க ஆகியோர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

எங்கெங்கு கூட்டணியாக போட்டியிடுவது, எங்கெங்கு தனித்து போட்டியிடுவது, எந்த பகுதிகளில் யானை சின்னத்தில் போட்டியிடுவது, எந்த தொகுதிகளில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவது என்பன குறித்து கலந்துரையாடி, இறுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles