யாழிலும் மலையக எழுச்சி பேரணி ஆரம்பம்

வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.

தலைமன்னார் முதல் மாத்தளை வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரை இப் பேரணி செல்லவுள்ளது.

யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாக யாழ் நகரிலிருந்து வவுனியா நோக்கி புறப்பட்டுச் சென்றது.

இதன் போது மதத்தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Latest Articles