யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை பகுதியில் அதி சொகுசு பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 10:30 மணியளவில் ஏ9 வீதியில் மீசாலை வீரசிங்கம் பல்லூரி முன்பாக இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழுப்பு நோக்கி சென்று கொண்டிருந்த அதி சொகுசு பேருந்து பாதசாரிக் கடவையில் பிறிதொரு வாகனத்தை வேகமாக முந்திச் செல்ல முற்பட்ட வேளை கிளிநொச்சியிலிருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொன்டிருந்த குடும்பஸ்தரை மோதியதில் குறித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் விவேகாணந்த நகர் கிழக்கு கிளிநொச்சியை சேர்ந்த 41 வயதுடைய சின்ராசா சுதன்ராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய சாரதி மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்து தப்பித்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்துள்ளனர்.
இருவரையும் கைது செய்த பொலிஸார், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
