யாழில் வீடொன்றின்மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வீதியில் உள்ள வீடொன்றின் மீதே நேற்றிரவு(21) இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டின் கதவு, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றின் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

பின்னர் வீட்டின் வளவுக்குள் பெற்றோல் குண்டு ஒன்றினை வீசி விட்டுத் தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles