யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்துள்ள 19 நாட்களில் 886 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 111 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களிலேயே அதிகளவில் டெங்கு பரவும் அபாயம் நிலவுவதாகவும் இதனை கருத்திற்கொண்டு நாளை அரச நிறுவனங்களில் விசேட டெங்கு கட்டுபாடு செயற்றிட்டம் முன்னெடுக்கபடவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
