ரணிலின் ஆட்சிதான் மலையகத்துக்கு பொற்காலம்

நல்லாட்சியின்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிதான் மலையக மக்களுக்கு பொற்காலமாக அமைந்தது. தற்போதும் ஜனாதிபதி புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கின்றார். எனவே, அவரை நாம் நிச்சயம் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

“ மலையக மக்களுக்கு வாக்குறுதி பெற்றுத் தந்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் மறக்ககூடாது. மலையக மக்களின் வீட்டுத் திட்டங்கள், சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை, கல்வியற் கல்லூரிகள் என்று பல சேவைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்திருக்கிறார். 1700 சம்பள அதிகரிப்பையும் ஜனாதிபதி உறுதி செய்வார் என்று நம்புகிறோம்.

மலையகத்தின் தமிழ் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒன்றிணைத்துள்ளார். எனவே நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே வாக்களிப்போம். அன்று கொன்று தள்ளிய தோட்ட அதிகாரிகளையும், தீயிட்டு கொழுத்திய தொழிற்சாலைகளையும், மக்களின் அடையாள அட்டைகளையும் அவர்களால் பெற்றுத்தர முடியுமா?” என்றும் வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பினார்.

Related Articles

Latest Articles