“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அரணில் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிரணியாக நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பட்டலந்த வதை முகாம் குற்றச்சாட்டு, மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு என்பவற்றை மக்கள் முன்வைத்து , இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனக் கூறிதான் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. அதை செய்யுங்கள். அதை செய்வீர்கள் ஆனால் கூட்டாக ஊடக சந்திப்பை நடத்த வேண்டி வந்திருக்காது.
ஆனால் தற்போது ஜனநாயகம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. பணத்தை மீளக்கோரி ரணிலுக்கு கடிதம் அனுப்பி இருக்கலாம். அவர் மீள செலுத்தி இருக்காவிட்டால் நடவடிக்கை எடுத்திருக்கலாம். எனவே இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்.” – எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.