ரணிலின் விடுதலைக்காக எல்லா வழிகளிலும் போராடுவோம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவித்துக்கொள்வதற்காக ஜனநாயக வழியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிரணிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று விசேட ஊடக சந்திப்பை நடத்தின.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட எதிரணி தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

சந்திரிக்கா அம்மையாரும் இதற்கு ஆதரவளித்திருந்தார். அவரின் அறிக்கையை ஊடக சந்திப்பின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதாஅத்துகோரள வாசித்தார்.

ஊடக சந்திப்பை ஆரம்பித்துவைத்து கருத்து வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன கூறியவை வருமாறு,

“ நாட்டில் ஜனநாயகம் என்பது மிக முக்கியம். எனவே, ஜனநாயகத்தை சவப்பெட்டியில் புதைப்பதற்குரிய நகர்வுகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக தெரிகின்றது. எனவே, ஜனநாயகத்தை பாதுகாப்பதென்பது ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும். அதற்காகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

அரசியல்வாதியொருவர் சிறை வைக்கப்பட்டால்தான் அவரது அரசியல் வாழ்வு முழுமைப்பெறும். நிலைமை இவ்வாறு இருந்தாலும் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை கவலையளிக்கின்றது. அவரை விடுதலை செய்வதற்காக அரசியல் கட்சிகளும், சட்டத்தரணிகள் குழுவும், சிவில் அமைப்புகளும் தம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் ஜனநாயக வழியில் முன்னெடுக்கும்.” – என்றார் மைத்திரி.

Related Articles

Latest Articles