” ரணிலைவிட திறமையான வேட்பாளர்கள் மொட்டு கட்சி வசம்” – சாகர

” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடிய தகுதியான வேட்பாளர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம் உள்ளனர்.” – என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை மொட்டு கட்சி எடுத்துள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கட்சி இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிடக்கூடிய தகுதியான வேட்பாளர்கள் எமது கட்சி வசம் உள்ளனர். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே எமது வேட்பாளர் அறிவிக்கப்படுவார். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. தற்போது அது பற்றி அறிவிப்பது ஏற்புடையது அல்ல. ரணில் விக்கிரமசிங்கவைவிடவும் திறமையான வேட்பாளர்கள் உள்ளனர்.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles