ரணில் அதிஷ்டத்தின் அடையாளம் – கம்மன்பில பெருமிதம்!

” நாடாளுமன்ற உறுப்பினர்கள் 134 பேர் ஆதரவு வழங்கினாலும், நாட்டு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஏற்கவில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

” ரணிலின் தெரிவை மக்கள் ஏற்கமாட்டார்கள். போராட்டம் தொடரப்போகின்றது. நாட்டில் நெருக்கடி ஏற்படும் அபாயமும் உள்ளது.

நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரின் கீழ் சர்வக்கட்சி அரசமைப்பது சர்ச்சையே.

ரணில் விக்கிரமசிங்க என்பவர் அதிஷ்டத்தின் அடையாளம். விரக்தியில் இருப்பவர்கள் ரணிலை நினைத்துக்கொண்டால் சரி. முடியாது என எதுவும் இல்லை.” – என்றும் கம்மன்பில குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles