ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிப்பதற்கு சாத்தியமே இல்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிதான் இந்த நாட்டை வங்குரோத்து அடையவைத்தது. அந்த தரப்புடன்தான் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரான தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இருக்கின்றார்.
இவ்வாறு நாட்டை வங்குரோத்து அடைய வைத்தவர்களுக்கு அதனை மீட்க முடியுமா? முடியாது.
புதியதொரு அரசே எமது நாட்டுக்கு தேவைப்படுகின்றன. அதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.” – என்றார்.