” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுவாரென நம்புகின்றேன். நானும் தற்போது அரசு பக்கம்தான் உள்ளேன்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
மேர்வின் சில்வாவின் பிறந்தநாள் இன்றாகும். இதனைமுன்னிட்டு
களனி ரஜமஹா விகாரைக்கு இன்று வருகை அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மேர்வின் சில்வா,
” நான் அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை. ஒதுக்க முற்பட்டாலும் ஒதுங்கமாட்டேன். களனி பகுதிக்கு மீண்டும் சேவையாற்ற வேண்டும். நாடாளுமன்றம் செல்வேன்.” – எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.
