நாட்டின் தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டுக்கு நல்லது. எனினும், அவர் நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கடட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
“ நாட்டின் தற்போதைய நிலைமையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபையில் இருந்தால் நாட்டுக்கு நல்லது என்றே நான் நினைக்கிறேன். என்றாலும் அதுதொடர்பான எந்த தயார் நிலையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
அவர் நாடாளுமன்றம் செல்வதாக இருந்தால், சரியான நேரம் காலம் பார்த்து செல்வார். என்றாலும் இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதையக்கு இடம்பெறவில்லை.
அதேநேரம் கூட்டு எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றன.
அந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சியும் அதில் கலந்துகொண்டு, கூட்டாக செயற்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைத்துக்கொள்ள முடியுமாகும் என நம்புகிறோம்.” – எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.