ரணில் நிச்சயம் களமிறங்குவார்!

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில் விக்கிரமசிங்க ஒருமாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை அறிவிப்பார். அவர் நிச்சயம் போட்டியிடுவார் என்று சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் ஐக்கிய தேசியக் கட்சியின் 10 அல்லது 15 உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள் என்பதை உறுதியாகக் குறிப்பிடலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பலவீனப்படுத்துவதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ஐக்கிய மக்கள் சக்திக்குள் இணைத்துக் கொள்கிறார். கட்சியை ஸ்தாபிப்பதற்கு சரத் பொன்சேகா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளினால் ஐக்கிய மக்கள் சக்தி முழுமையாக இல்லாதொழியும்.” – எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles