ரணில் விக்கிரமசிங்க என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியே தீர்மானிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் எந்ததேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார். விரைவில் தேர்தலொன்று நடைபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம். உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட்டால்கூட பரவாயில்லை. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அத்தேர்தலிலும் களமிறங்க தயார்.
ரணில் விக்கிரமசிங்க தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர், மொட்டு கட்சியின் வேட்பாளரை எமது கட்சியே முடிவெடுக்கும். ஜனாதிபதியின் சில கொள்கைகள் தொடர்பில் விமர்சனங்கள் உள்ளன. அதனை வெளிப்படுத்துவதற்கு நாம் தயங்கமாட்டோம். வெளிப்படையாகவே அறிவித்தும் இருக்கின்றோம். எமது கொள்கைகளைக் காக்க போராடுவோம்.” – என்றார்.
