ரயில் பயணச்சீட்டுக்களை வழங்குவது தொடர்பில் நாளை ஆய்வு

ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கையை நாளை நடைபெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்பதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவைகளுக்கும் அனுமதியைப் பெற எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரயில் பருவகால சீட்டை வைத்திருப்பவர்கள் மாத்திரம் ரயிலில் பயணிக்க அனுமதிக்கும் முடிவு கொவிட் கட்டுப்பாட்டுக் குழுவினால் எடுக்கப்பட்டது. அதை மாற்றும் அதிகாரம் அந்த குழுக்கே உள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles