எல்ல நானுஓயா ODC ரயிலில் நபர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த ODC ரயிலில்
ஹாலிஎலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த நபர் மோதி உயிரிழந்துள்ளதாகவும் சடலம் தற்போது பதுளை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் யாரென்று அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் 40 வயது மதிக்கத்தக்கவர் எனவும் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா