ஹட்டன், சிங்கமலை சுரங்கத்துக்கு அருகில் ரயில் மோதி நேற்று உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர், மஸ்கெலியா, கிரண்டில் தோட்ட காரியாலயத்தில் பணிபுரிந்த புஷ்பராஜ் (57) என்ற 3 பிள்ளைகளின் தந்தையாவார்.
தனக்கு புதிய வீடொன்றை வாங்குவதற்காக வீட்டை பார்வையிட சென்ற போதே ரயிலில் மோதி பலியானார். சம்பவம் தொடர்பான விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே நேற்று மதியம் அவரை மோதியது.
-கௌசல்யா-










