ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்களில் 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
2025 ஜனவரி 20ஆம் திகதி வரையான தகவல்களை அடிப்படையாகக்கொண்டே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர்களை விடுவித்து, நாட்டுக்கு மீள கொண்டுவருவதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.










