ரஷ்ய ஜனாதிபதி புடினுக்குபோல் எனக்கும் அதிஷ்டம் வருகின்றது. எனது ஜாதக நிலையும் நல்லதாகவே உள்ளது. ஆக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகவே இருக்கின்றேன் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவேண்டாம் என கூறினேன், ஆனால் மக்கள் வாக்களித்தனர். இறுதியில் என்ன நடந்தது? நான் கூறியதுபோல நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, எமது கருத்துகளையும் மக்கள் செவிமடுக்க வேண்டும்.
எனக்கு கட்சி இருக்கின்றது, சிறந்த தலைவராக நான் உள்ளேன். அதுமட்டும் அல்ல ஜாதக நிலையும் நல்லதாகவே உள்ளது. புடினுக்குபோல எனக்கும் அதிஷ்டம் தென்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான அனைத்து தகுதியும் எனக்கு இருக்கின்றது. எனக்கு இல்லாத தகைமை என்ன?” – என்றார்.
