ராஜபக்சக்கள் தேர்தலுக்கு அஞ்சுபவர்கள் அல்லர்

“எந்தத் தேர்தலுக்கும் ராஜபக்ஷக்கள் பயப்படுபவர்கள் அல்லர். நான் ஜனாதிபதியாக இருந்தவேளை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தினேன். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உரிய காலத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும். அவர் தவறு இழைக்கமாட்டார் என்று நம்புகின்றேன்.”

-இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

” ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன் றத் தேர்தலைப் பிற்போடும் ஐக்கிய தேசியக் கட்சி யின் யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமா?” – என்ற கேள்விக்குப் பதிலளிக் கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல்களைப் பிற்போட நாம் அனுமதிக்கமாட்டோம். குறிப்பாக பிரதான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தியே தீர வேண்டும். எமது நிலைப் பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை. ஜனாதிபதியிடம் இதனைத் தெரிவித் துள்ளோம். இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடந்தே ஆக வேண்டும். மொட்டுக் கட்சி யின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் வெளிப்படுவார்.” – என்றார்.

Related Articles

Latest Articles