ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் கோட்டையே அம்பாந்தோட்டை மாவட்டம். அதிலும் தங்காலை என்பது அவர்களின் பூர்வீக ஊர்.
எனவே, தங்காலையில் இருந்துதான் ஆட்சியைப் பிடிப்பதற்கான முதலாவது பிரச்சாரக்கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி ஆரம்பிக்கவுள்ளது.
நாளை 26 ஆம் திகதி அநுரகுமார திஸாநாயக்க உட்பட முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரச்சாரக்கூட்டம் கடந்த 9 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்றது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பிறப்பு மாவட்டமாக அநுராதபுரமே திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.