ராஜினாமா கடிதம் ஏற்பு – புதிய பதவியும் தயார் நிலையில்!

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரியவருகின்றது.

அரசுக்கு சார்பான ஊடக வலையமைப்பொன்றின் இணையத்தளம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், புதிய ஜனாதிபதி செயலாளராக, தற்போதைய பிரதம செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படக்கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

பி பீ ஜயசுந்தர பதவி விலக வேண்டும் என அரசுக்குள்ளேயே அழுத்தங்கள் வலுத்த நிலையில், அவர் பதவி துறக்க தயாரானார். ஆரம்பத்தில் ஜனாதிபதி கடிதத்தை ஏற்கவில்லை. எனினும், தற்போது ஏற்றுள்ளார்.

பதவி துறக்க முடிவெடுத்துள்ள பி பீ ஜயசுந்தரவுக்கு நிதி அமைச்சர் சிரேஷ்ட ஆலோசகர் பதவியொன்று கிடைக்கப்படபெறவுள்ளது. இதற்கு நிதி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles